விருப்பமில்லாமல் தான் தனுஷூடன் நடித்தேன் - இயக்குனர் விக்னேஷ் சிவன் பேட்டி !

நடிகர் தனுஷ் படத்தில் விருப்பமில்லாமல் தான் நடித்தேன் என்று இயக்குனர் விக்னேஷ் சிவன் கூறியிருப்பது சினிமா வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.டுத்தியுள்ளது.

விருப்பமில்லாமல் தான் தனுஷூடன் நடித்தேன் - இயக்குனர் விக்னேஷ் சிவன் பேட்டி !

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் நடிகர் தனுஷ், நடிப்பும் மட்டுமில்லாது ஒரு சிறந்த பாடகராகவும், தயாரிப்பாளராகவும் தன் பணியை சிறப்பாக செய்து வருகிறார். இப்படிதன் நடிப்பால் உயர்ந்து தற்போது ஒரு பிரபல நட்சத்திரமாக வளர்ந்து நிற்கும் நடிகர் தனுஷ்க்கு சிறந்த நடிகருக்கான இந்திய தேசிய திரைப்பட விருதினை வழங்கி கெளரவித்தனர்.

இவர் நடிப்பில் வெளியான ’துள்ளுவதோ இளமை’ திரைப்படம் முதல் ’கர்ணன்’ வரை பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். ஆனால் கடந்த 2014 ஆம் ஆண்டு இவரது நடிப்பில் வேல் ராஜ் இயக்கத்தில் வெளியான ‘வேலையில்லா பட்டதாரி’ திரைப்படம் தனுஷுக்கு ஒரு திருப்பு முனையாக அமைந்தது என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு ரசிகர்களிடம் ஒரு கனெக்ட்டை ஏற்படுத்திய படம் என்றே சொல்லலாம். வெறும் 8 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப்படத்தின் வசூல் கிட்டதட்ட 53 கோடி ரூபாயை தாண்டி சென்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த படத்தில் கேமியோ ரோலாக படத்தின் கடைசி பகுதியில் நடித்திருந்த இயக்குனர் விக்னேஷ் சிவன் சமீப்பத்தில் தான் நடித்தது குறித்து பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அந்த பேட்டியில், ‘எனக்கு நடிப்பதில் பெரிதாக ஆர்வமில்லை. விருப்பம் இல்லாமல் தான் ’வேலையில்லா பட்டதாரி’ படத்தில் நடித்தேன். உண்மையில் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தவர் அன்றைக்கு வரவில்லை. எனவே தனுஷ் என்னை அந்த ரோலில் நடிக்க வைத்தார்’ என விக்னேஷ் சிவன் தெரிவித்திருப்பது சினிமா வட்டாரங்களில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.