ரூ.200 கோடியில் எடுக்கப்பட்ட திரைப்படம் ஓடாததால் - வருத்தத்தில் தவிக்கும் நடிகர் அக்‌ஷய் குமார்..!

இந்தி சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அக்ஷய் குமார். 'பச்சன் பாண்டே' படத்தை தொடர்ந்து 'சாம்ராட் பிரித்விராஜ்' படத்தில் நடித்துள்ளார். 

ரூ.200 கோடியில் எடுக்கப்பட்ட திரைப்படம் ஓடாததால் - வருத்தத்தில் தவிக்கும் நடிகர் அக்‌ஷய் குமார்..!

மன்னர் பிரித்விராஜ் சவுகான் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் பிரித்விராஜ் சவுகான் கதாபாத்திரத்தில் அக்‌ஷய் குமார் நடிக்க, கதாநாயகியாக மனுஷி சில்லர் நடித்திருக்கிறார். மனுஷி சில்லர், 2017-ஆம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சஞ்சய் தத், சோனு சூட், அஷுதோஸ் ராணா, லலித் திவாரி உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர். 

'யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ்' தயாரித்துள்ள இப்படத்தை சந்திர பிரகாஷ் திவேதி இயக்கியிருக்கிறார். வரலாற்று படமாக உருவாகி இருக்கும் இத்திரைப்படம் இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் சில தினங்களுக்கு முன்னதாக வெளியானது.

இருப்பினும் எதிர்பார்த்த அளவுக்கு 'சாம்ராட் பிரித்விராஜ்' திரைப்படம்  வெற்றியை பெற்றுத் தரவில்லை. இதனால் படத்திற்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பெரும் நம்பிக்கையுடன் ரூ.200 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம், பட்ஜெட்டில் பாதியை கூட வசூலிக்கவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும் படத்திற்கு டிக்கெட் ஏதும் விற்பனை ஆகாததால் தியேட்டரை விட்டு வெளியேறும் நிலைமைக்கு படம் தள்ளப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இதனால் படக்குழு மிகுந்த அதிர்ச்சியோடு சோகத்தில் தவித்து வருவதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.