இங்கிலாந்துக்கும் பைக்கை கூடவே கொண்டு போன நடிகர் அஜித் - இணையத்தை கலக்கும் புகைப்படம்!

நடிகர் அஜித் ஒரு பைக் பிரியர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இவர் பைக்குகளில் இந்தியாவில் மட்டுமல்லாது பல உலக நாடுகளிலும் பயணம் செய்திருக்கிறார் என்பதும் தவிர்க்க முடியாத ஒன்றாகும்.

இங்கிலாந்துக்கும் பைக்கை கூடவே கொண்டு போன நடிகர் அஜித் - இணையத்தை கலக்கும்  புகைப்படம்!

இதன் அடிப்படையில் நடிகர் அஜித் ak61 ன் படப்பிடிப்புகளுக்கு மத்தியில் இங்கிலாந்தில் பைக் பயணம் செய்து வருவதாக தகவல்களும் புகைப்படங்களும் வெளியாகி வைரலாகி வருகிறது.

மேலும் இங்கிலாந்து அமைந்திருக்கும் சாலைகளில் நடிகர் அஜித் பைக்குடன் நிற்பது போன்ற காட்சிகளும் அவர் பயணம் மேற்கொள்ளும் காட்சிகளும் இணையத்தில் கடும் வைரலாகி வருகிறது.

சமீபத்திலே 'ஏகே 61' படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை முடித்த அஜீத் இங்கிலாந்துக்கு பைக்கை கொண்டு சென்று பயணத்தில் ஈடுபட்டுள்ளார்.  மேலும் இந்த பயணத்தை முடித்த பிறகு நடிகர் அஜித் இந்தியா திரும்பியவுடன் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.

'ஏகே 61' படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் புனேவில் நடைபெற இருப்பதாகவும், இந்த படப்பிடிப்பில் நடிகை மஞ்சுவாரியார் உள்பட பலர் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது. எச். வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் ஜிப்ரான் இசையில் உருவாகி வரும் 'ஏகே 61' திரைப்படம் வரும் தீபாவளி அன்று திரைக்கு வர இருப்பது குறிப்பிடத்தக்கது.