ஐரோப்பிய சுற்றுலாத்தளங்களில் - உலாவும் நடிகர் அஜித் : வைரலாகும் புகைப்படங்கள்!!

ak-61 திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் ஹைதராபாத்தில் முடிந்ததை அடுத்து நடிகர் அஜித் ஐரோப்போ நாடுகளுக்கு தனது சுற்றுலாப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார். 

ஐரோப்பிய சுற்றுலாத்தளங்களில் - உலாவும் நடிகர் அஜித் : வைரலாகும் புகைப்படங்கள்!!

வலிமை திரைப்படத்தினை தொடர்ந்து எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் மூன்றாவது முறையாக கைக்கோர்த்திருக்கிறார். ak-61  என இத்திரைப்படத்திற்கு தற்காலிகமாக பெயரிடப்பட்ட நிலையில் இத்திரைப்படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக நடிகை மஞ்சு வாரியார் நடித்து வருகிறார்.

மேலும் இத்திரைப்படத்தில் சமுத்திரக்கனி, வீரா உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார்கள். போனி கபூர் தயாரித்து வரும் இத்திரைப்படத்துக்கு இசையை ஜிப்ரான் இயக்க உள்ளார். 

மேலும் இத்திரைப்படத்துக்கான படப்பிடிப்புகள் தொடங்கிவிட்டன எனவும் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ak-61ன் முதற்கட்ட படப்பிடிப்புகளாப்னது ஹைதராபாத்தில் நிறைவடைந்ததாக சொல்லப்பட்டது.

இதன் படப்பிடிப்புகள் முடிந்ததும் அடுத்த கட்ட படப்பிடிப்பு எப்பொழுது எங்கே என சொல்லுங்கள் அதுவரை நான் சுற்றுலா செல்கிறேன் என்றவாறு ஐரோப்பா புறப்பட்டு இணையத்தையே ஒரு கலக்கு கலக்கி வருகிறார் நடிகர் அஜித். 

முன்னதாக நடிகர் அஜித் இங்கிலாந்துக்கு செல்ல கூடவே தனது பைக்கையும் கொண்டு சென்ற புகைப்படங்களும் அவர் சாலையில் தனது பைக்கோடு எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் வெளியாகி வைரலாகி வந்தது.

மேலும் இதையடுத்து கப்பலில் எடுத்த புகைப்படங்கள் அதனோடு ரேஸ் பைக்கோடு இருக்கும் புகைப்படங்கள் என அனைத்தும் வெளியாகி தற்போது வரை வைரலாகி வருகின்றது. ஐரோப்போ நாட்டுக்கு சுற்றுலா மேற்கொண்ட அஜித் மேலும் பல இடங்களை சந்தித்துவிட்டு மீண்டும் படப்பிடிப்புக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.