வெள்ளி விழா ஆண்டில் காதல் கோட்டை.! நடிகர் அஜீத் விழாவில் பங்கேற்கவில்லை

வெள்ளி விழா ஆண்டில் அடியெடுத்து வைக்கும் காதல் கோட்டை படம்

வெள்ளி விழா ஆண்டில் காதல் கோட்டை.! நடிகர் அஜீத் விழாவில் பங்கேற்கவில்லை

அகத்தியன் இயக்கத்தில் அஜீத்குமார் நடிப்பில் வெளியான படம் காதல் கோட்டை. இப்படத்தில் தேவயானி, ஹீரா, கரண், பாண்டு, மணிவண்ணன், ராஜீவ், தலைவாசல் விஜய் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு தங்கர்பச்சன் ஒளிப்பதிவு செய்ய தேவா இசையமைத்திருந்தார்.

சிவசக்தி பாண்டியன் தயாரித்த படம் காதல் கோட்டை. இப்படம் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவுபெறுவதையொட்டி தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் விழா ஒன்றை நேற்று நடத்தினார்.  

இந்த கொண்டாட்டத்தில் படத்தின் இயக்குநர் அகத்தியன், நாயகி தேவயானி, தலைவாசல் விஜய், ஒளிப்பதிவாளர் தங்கர்பச்சன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கதாநாயகன் அஜீத்குமார் விழாவில் பங்கேற்கவில்லை. அவரது திரையுலக வாழ்வில் முழுமையான வியாபார முக்கியத்துவமிக்க கதாநாயகனாக அடையாளப்படுத்திய படம் காதல் கோட்டை என்பது குறிப்பிடத்தக்கது.

1996ம் ஆண்டுக்கான சிறந்த பிராந்தியமொழி திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த திரைக்கதை அமைப்பு என மூன்று பிரிவுகளில் தேசிய விருதை பெற்று தமிழ்சினிமாவுக்கு பெருமை சேர்த்த படம் காதல் கோட்டை.