உடல் எடையை குறைத்த நடிகர் அஜித்குமார்...எதற்காக தெரியுமா.!!

உடல் எடையை குறைத்த நடிகர் அஜித்குமார்...எதற்காக தெரியுமா.!!

வலிமை படத்தை தொடர்ந்து அஜித், போனி கபூர் மற்றும் வினோத்தின் கூட்டணி மீண்டும் உருவாக உள்ள படம் AK 61.இந்த படம் உலக அளவில் மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளை குறித்து பேசவுள்ளதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குநர் எச்.வினோத் கூறியிருந்தார்.

சமீபத்தில் இந்த படத்தின்  போட்டோ ஷூட் புகைப்படத்தை போனிகபூர் வெளியிட்டிருந்தார்.

இந்தநிலையில் இந்த படத்திற்கான புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. ஆம் AK 61 படத்தில் நடிப்பதற்காக நடிகர் அஜித்குமார் தனது எடையை 25 கிலோ வரை குறைக்க உள்ளதாகவும், இதுவரை 10 கிலோ உடல் எடையை குறைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.