ஏகே 61 படப்பிடிப்பிற்காக விசாகப்பட்டினம் செல்லும் ஏகே...! விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட வீடியோ வைரல்...!

ஏகே 61 படப்பிடிப்பிற்காக நடிகர் அஜித்குமார் விசாகப்பட்டினம் சென்றுள்ளார். விமான நிலையத்தில் அவர் சென்ற வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஏகே 61 படப்பிடிப்பிற்காக விசாகப்பட்டினம் செல்லும் ஏகே...! விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட வீடியோ வைரல்...!

நேர்கொண்ட பார்வை, வலிமை படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் - போனி கபூர் - எச். வினோத் கூட்டணியில், மூன்றாவது முறையாக ஏகே 61 படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் வங்கி கொள்ளையை அடிப்படையாக கொண்டு உருவாகி வருவதாகவும், அஜித் இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்கிறார் எனவும் சொல்லப்பட்டு வருகிறது. ஏகே 61 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து முடிந்தது. அதன் பின்னர் ஐரோப்பாவிற்கு சுற்று பயணம் மேற்கொண்டார் நடிகர் அஜித். 

இவரின் புகைப்படங்கள் சில அவ்வப்போது இணையத்தில் வெளியாவது ரசிகர்களை  உற்சாகப்படுத்தி உள்ளது.  முன்னதாக  இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக மஞ்சு வாரியர் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. மேலும் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு எப்போது என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகமாக இருந்தது. 

ஏகே 61 படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு எங்கு நடத்தலாம் என படக்குழுவினர், பல்வேறு இடங்களை தேர்வு செய்ததாக ஒரு தகவல் வெளியானது. இந்நிலையில், நடிகர் அஜித்குமார் சென்னை விமான நிலையத்தின் பேருந்தில் மக்களோடு மக்களாக பயணித்த நடிகர் அஜித்குமாரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் உற்சாகமடைந்து, விரைவில் ஏகே 61 திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து, ஏகே வின் தரிசனத்தை திரையில் காண ஆர்வமாக காத்திருப்பதாகவும் அவரது ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.