பாண்டிச்சேரி டிரிப் போதும்.. கொஞ்சம் ஜெயிலுக்கு வாங்க..!

பாண்டிச்சேரி டிரிப் போதும்.. கொஞ்சம் ஜெயிலுக்கு வாங்க..!

பெரியார் சிலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில் ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணனுக்கு வரும் 26-ம் தேதி வரை காவல் விதித்து சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

சர்ச்சை பேசிய ஸ்டண்ட் மாஸ்டர்:

சென்னை மதுரவாயலில் கடந்த ஒன்றாம் தேதி, இந்து முன்னணி சார்பில் நடத்தப்பட்ட கூட்டத்தில், பேசிய கனல் கண்ணன் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் எதிரே உள்ள பெரியார் சிலையை உடைக்கும் நாளே, இந்துக்களின் எழுச்சி நாள் என்றார். இது குறித்து பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் அளித்த புகாரின் பேரில் கனல் கண்ணன் மீது சென்னை சைபர் கிரைம் போலீசார் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டது.

தலைமறைவான கனல் கண்ணன்:

கனல் கண்ணன் மீது தொடரப்பட்ட வழக்கில் போலீஸ் தேடுவதை அறிந்து கனல் கண்ணன் தலைமறைவானார்.  இதற்கிடையில், இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி, கனல்கண்ணன் தொடர்ந்த முன் ஜாமீன் மனுவை, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கைதான கனல் கண்ணன்:

இந்நிலையில், தலைமறைவான ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் புதுச்சேரியில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்த நிலையில், சென்னை மத்திய குற்றப் பிரிவு சைபர் க்ரைம் போலீஸார் புதுச்சேரிக்கு  அவரை தேடி சென்றனர். இதனையடுத்து, 76 வது சுதந்திர தினவிழாவையொட்டி இன்று புதுச்சேரியில் பதுங்கியிருந்த கனல்கண்ணனை, சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

நீதிமன்றத்தில் ஆஜார்:

இதையடுத்து சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் போலீசார் அவரை ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி லட்சுமி, வரும் 26-ம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார். பின்னர் புழல் சிறைக்கு கொண்டு சென்ற போது,  கனல் கண்ணன் ஆதரவாளர்கள் வாகனத்தை வழி மறித்து முழக்கமிட்டதால் பரபரப்பு நிலவியது.

செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர்:

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கனல் கண்ணன் தரப்பு வழக்கறிஞர் கார்த்திகேயன், ஜாமீன் கேட்டு  மனுத் தாக்கல் செய்துள்ளதாகவும் நாளை மனு விசாரணைக்கு வர உள்ளதாகவும் தெரிவித்தார்.


பரியேறும் பெருமாள் தந்தை காலமானார்...

பறியேறும் பெருமாள் படத்தில் தந்தையாக நடித்திருந்த நடிகர் தங்கராஜ் உடல்நலக்குறைவால் காலமானார்.

நெல்லை | பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் அறிமுகமான கிராமிய தெருக்கூத்து கலைஞர் நெல்லை தங்கராஜ் இன்று காலை உடல்நலக்குறைவால் காலமானார். உயிரிழந்த நெல்லை தங்கராஜ் உடலுக்கு இயக்குனர் மாரி செல்வராஜ் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மாரி செல்வராஜ்,

தேடி கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கலைஞர் ஒரே படத்தில் அனைவரின் மனதிற்குள் சென்று அகத்தையும் ஒவ்வொருவரின் சுயத்தையும் கேள்வி கேட்ட ஒரு நபர். தங்கராஜ் அவர்களின் கனவு பயணம் மிக தாமதமாகவே தொடங்கியது... அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்

என பேட்டியளித்தார்.   அது மட்டுமின்றி, கிடைத்த ஒரே வாய்ப்பில் அனைவர் மனதிலும் இடம் பிடித்தவர் நடிகர் தங்கராஜ் என்று புகழாரமும் சூட்டினார்.

மேலும் படிக்க | காலமானார் பழம்பெரும் இயக்குநர் விஸ்வநாத்...!

இந்தியத் திரையுலகின் மூத்த இயக்குநர்களில் ஒருவரான கே.விஸ்வநாத் வயது மூப்பு காரணமாக  காலமான நிலையில், அவரது இறப்பிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், சினிமா பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பாதாள பைரவி மூலம் எண்ட்ரீ :

1951 இல் பாதாள பைரவி மூலம் தெலுங்குத் துறையில் அறிமுகமான கே.விஸ்வநாத், பின்னர் 1965-ம் ஆண்டு இயக்குனராக அவதாரம் எடுத்து உருவாக்கிய முதல் படமான ஆத்ம கவுரவம் சிறந்த இயக்குனர் மற்றும், சிறந்த படத்துக்கான நந்தி விருதை வென்றார்.  சென்னையில் ஆடியோகிராபராக தனது வாழ்க்கையைத் தொடங்கி பின்னர் சவுண்ட் எஞ்சினியரானார். 

தமிழில் சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து ஆகிய படங்களை கே.விஸ்வநாத்  இயக்கியுள்ளார். மேலும், குருதிப்புனல், முகவரி, ராஜபாட்டை, யாரடி நீ மோகனி, லிங்கா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.   
இந்திய சினிமாவின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது மற்றும் பத்ம ஸ்ரீவிருது வழங்கி மத்திய அரசு கவுரவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல், 7 முறை நந்தி விருது, 5 முறை தேசிய விருது வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க : தனித்தனியாக சென்ற அதிமுகவினர்...சொன்னது என்ன?

காலமானார் கே.விஸ்வநாத் :

இந்நிலையில் வயது மூப்பு காரணமாக கடந்த சில காலமாகவே சினிமாவில் இருந்து விலகி ஐதராபாத்தில் தனது குடும்பத்துடன் ஓய்வெடுத்து வந்த நிலையில், நேற்று நள்ளிரவு கே.விஸ்வநாத்  காலமானார். படைப்பாற்றல் மற்றும் பன்முக இயக்குனராக தன்னை வேறுபடுத்திக் கொண்டு, சினிமா உலகின் தலைசிறந்தவராக திகழ்ந்த விஸ்வநாத் மறைவு செய்தி வருத்தமளிப்பதாக பிரதமர் நரேந்திரமோடி டுவிட்டர் பதிவில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இரங்கல் தெரிவிப்பு :

காலத்தால் அழியாத திரைக்காவியங்கள் மூலமாக இந்திய அளவில் மக்கள் மனதில் இடம்பிடித்த இயக்குநரின் மறைவு வேதனை அளிப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மேலும் அவரது உடலுக்கு தெலுங்கு நடிகர் சிரஞ்சிவி, பவன் கல்யாண் உள்ளிட்ட நடிகர்களும், முன்னாள் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு உள்ளிட்டோரும்  நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். அவரது மறைவுக்கு  இசையமைப்பாளர் இளையராஜா வீடியோ வாயிலாகவும், கமல்ஹாசன் டுவிட்டர் மூலமாகவும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பழம்பெரும் நடிகரும் இயக்குனருமான கே.விஸ்வநாத் காலமானார்.

கடந்த 1957-ல் சென்னையில் தனது திரைப்பட வாழ்க்கையை தொடங்கிய இவர் 1975-ல் முதன்முறையாக ஆத்ம கவுரவம் என்ற தெலுங்கு திரைப்படத்தை இயக்கினார்.  இதற்கு நந்தி விருது வழங்கப்பட்டது.  பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார் விஸ்வநாத்.

 தமிழில் குருதிப்புனல், முகவரி,  காக்கைச் சிறகினிலே, பகவதி, யாரடி நீ மோகினி
 அன்பே சிவம், , சிங்கம்-2, உத்தம வில்லன் ஆகிய படங்களில் தனது நடிப்பின் மூலம் முத்திரையை பதித்துள்ளார்.

திரைப்படத் துறையில் இந்தியாவின் மிக உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருதைப் பெற்ற இவருக்கு பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டுள்ளது. மேலும்   எட்டு முறை நந்தி விருது, ஆறு முறை தேசிய விருது, ஒன்பது முறை ஃபிலிம் பேர் விருது பெற்றுள்ளார். 

 தமிழில் கடைசியாக , 'சொல்லி விடவா' என்கிற படத்திலும் நடித்திருந்தார்.  மேலும் பல தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

கடந்த சில வருடங்களாகவே வயது முதிர்வு மற்றும் நோயால் அவதிப்பட்டுவந்த இவர்,  நள்ளிரவு தனது 93 வயதில்  ஹைதராபாத்தில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.

-நப்பசலையார்

இதையும் படிக்க:  65 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க எழும்பூர் ரயில்வே காவல் துறை...!

விக்ரம் படத்தைத் தொடர்ந்து நடிகர் கமலஹாசன் தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் காஜர் அகர்வால், சித்தார்த், ரகுர் பிரீத்சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்த படத்திற்கு ரத்னவேலு, ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்ய அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஆந்திர மாநிலத்தின் திருப்பதியில் மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

மேலும் படிக்க | குரங்கு பொம்மை இயக்குனருடன் இணையும் மக்கள் செல்வன்... 

இதில் கலந்து கொண்ட கமலஹாசன், தனி ஹெலிகாப்டரில் திருப்பதியில் இருந்து காந்திகோட்டாவுக்கு பயணம் செய்துள்ளார்.

ஏற்கனவே விக்ரம் படத்தின் பல ப்ரொமோஷன் வேலைகளுக்காகவும் ஹெலிகாப்டரில் வந்ததாகக் கூறப்படும் நிலையில், கமல் தற்போது ஹெலிகாப்டரிலேயே சுற்றி வருகிறார் என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

--- பூஜா ராமகிருஷ்ணன்

மேலும் படிக்க | கமலுக்கும் விஜய்க்கும் என்ன சலசலப்பு? தளபதி 67இல் கமல் இல்லையா?

2017-ல விதார்த், பாரதிராஜா, இளங்கோ குமரவேல் ஆகியோர் நடிப்பில் வெளியான படம் குரங்கு பொம்மை. நிதிலன் சுவாமிநாதன் இயக்கத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.

2017-க்கு பிறகு கிட்டத்தட்ட 5 ஆண்டுகளாக எந்த படங்களையும் இயக்காத நிதிலன், மீண்டும் ஒரு திரைப்படத்தை இயக்க இருக்ப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

இதில் விஜய்சேதுபதி, நட்டி என்கிற நட்ராஜ் ஆகியோர் நடிக்க, இவர்களுடன் முனிஷ்காந்த், மணிகண்டன், அருள்தாஸ் ஆகியோர் நடிக்க இருபது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | கமலுக்கும் விஜய்க்கும் என்ன சலசலப்பு? தளபதி 67இல் கமல் இல்லையா?

இந்த படத்திற்கு காந்தாரா படத்தின் இசையமைப்பாளர் அஜனீஷ் லோக்நாத் இசையமைக்கும் நிலையில், இன்று இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இதற்கான டைட்டில் மற்றும் கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குரங்கு பொம்மை படத்தில் மிகவும் சீரியசான கதை மூலமாகவும், விறுவிறுப்பான திரைக்கதையாலும் ரசிகர்களை இருக்கை நுனியில் உட்கார வைத்த நிதிலன், அதே போல கதைக்களத்தை தேர்ந்தெடுத்தாரா? இல்லை வேறு ஜானர் படமா? என குழப்பங்கள் இருந்து வருகிறது. 

--- பூஜா ராமகிருஷ்ணன்

மேலும் படிக்க | எதிர்ப்புகளைத் தாண்டி வெற்றி வாகை சூடிய பதான்...