கனடாவில் ஏ.ஆர்.ரஹ்மான் பெயரில் புதிய தெரு.. இனி 2 தெரு அவரது பெயரில்...!

எல்லப்புகழும் இறைவனுக்கே..கனடா அரசுக்கு நன்றி தெரிவித்த ஏ.ஆர்.ரஹ்மான்..!

கனடாவில் ஏ.ஆர்.ரஹ்மான் பெயரில் புதிய தெரு.. இனி 2 தெரு அவரது பெயரில்...!

இசைப்புயல்:

காலம் மாற மாற மனிதர்களின் சுவை மாற மாற அதற்கேற்றார் போல தன்னையும், தன்னுடைய இசையையும் மாற்றி தனது சிம்மாசனத்திற்கு மாற்று யாருமே இல்லை என்ற அளவு தனக்கென ஒரு பாதையை உருவக்கி சென்று கொண்டிருக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் என்ற புயல், கோலிவுட்டையும் தாண்டி, பாலிவுட், ஹாலிவுட் வரை சென்று தமிழரின் பெருமையை உலகிற்கு பறைசாற்றி வருகிறது. 

கனடாவின் தமிழ் பற்று: 

எத்தனை உயரங்கள், எத்தனை மொழிகளுக்கு சென்றாலும், தாய் மொழியாம் தமிழ் மொழியை எங்கும், எப்போதும் இவர் விட்டுக் கொடுத்ததே இல்லை. சினிமா உலகின் உயரிய விருதான ஆஸ்கர் மேடையிலேயே இரண்டு கைகளிலும் விருதுகளை பெற்றுக் கொண்டு, எல்லாப் புகழும் இறைவனுக்கே என தனது தாய்மொழி பற்றை உலகறியச் செய்தார் ஏ.ஆர்.ரஹ்மான். ஒவ்வொரு சுதந்திர தினம், குடியரசுத் தினம் வந்தாலும், இவர் 
மெட்டில் உருவான வந்தே மாதரம் பாடல் இடம் பெறாத நிகழ்ச்சிகளே இருக்க முடியாது. இப்படி உலக மக்களை தன் இசையால் கட்டிப் போடும் ஏ.ஆர்.ரகுமானை கனடா நாடு பெருமைப்படுத்தியுள்ளது. 

அறிக்கை மூலம் நன்றி:

தமிழ்நாட்டை எடுத்துக் கொண்டேமேயானால், சுதந்திரத்திற்காக அல்லது மக்கள் நலனுக்காக, சமூக நீதிக்காக போராடி உயர்நீத்த தியாகிகளின் பெயர்களை தெருக்களுக்கு வைத்து அவர்களின் புகழுக்கு பெருமை அளிப்பது என்பது வாடிக்கையான ஒன்று. இந்தியாவிலும் இந்த பழக்கம் நடைமுறையில் உள்ளது. இந்தியாவையும், தமிழ்நாட்டையும் நமது பாரம்பரிய கலைகளையும் மதிப்பதில் கனடா நாட்டை அடித்துக் கொள்ள 
முடியாது. அந்த வகையில், தற்போது தனது நாட்டில் மற்றுமொரு தெருவிற்கு ஏ.ஆர்.ரகுமானின் பெயரை சூட்டியுள்ளது. ஏற்கனவே கடந்த 2013-ம் ஆண்டு ஏ.ஆர்.ரஹ்மானின் பெயரை ஒரு தெருவுக்கு சூட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது முறையாக நடந்துள்ள இந்த சம்பவத்திற்கு, ஏ.ஆர்.ரஹ்மான் அறிக்கை மூலம் பலருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். 

ஏ.ஆர்.ரஹ்மான் பெயரில் புதிய தெரு:

தமிழில் அடுத்தடுத்து அவரது இசையில் உருவாகியுள்ள படங்களின் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது. அந்த வரிசையில், வரும் செப்டம்பர் 2-ம் தேதி சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தின் இசைவெளியீட்டு விழாவும், அதனை தொடர்ந்து செப்டம்பர் 6-ம் தேதி பொன்னியின் செல்வன் படத்தின் இசை வெளியீட்டு விழாவும் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், கனடாவில் அவர் இரண்டாவது முறையாக பெருமைப்படுத்தப்படுவது தமிழ் ரசிகர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலரும் அவருக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.