லியோ படத்தின் முதல் டிக்கெட்டை ரூ.1.10 லட்சம் கொடுத்து வாங்கிய ரசிகர்!

லியோ படத்தின் முதல் டிக்கெட்டை ரூ.1.10 லட்சம் கொடுத்து வாங்கிய ரசிகர்!

கோவில்பட்டியில் லியோ திரைப்படத்தின் முதல் காட்சி டிக்கெட் ஒன்று 1லட்சத்து 10 ஆயிரத்து ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. 

நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படம் இன்று தமிழகத்தில் வெளியாகியுள்ளது. இதில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள சத்தியபாமா திரையரங்கில் இன்று காலை முதல் காட்சி ரசிகர்கள் காட்சியாக திரையிடப்பட்டுள்ளது. இந்த காட்சியின் முதல் டிக்கெட்டை ஒருவர் ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளார். கோவில்பட்டி சென்ட்ரல் லயன்ஸ் கிளப் மாவட்ட தலைவர் செல்வின் சுந்தர் என்பவர் 1லட்சத்து 10 ஆயிரத்து ஒரு ரூபாய்க்கு இந்த டிக்கெட்டை வாங்கியுள்ளார்.

இதற்கான காரணம் பற்றி விசாரித்த போது, நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நடைபெற்று வரும் இலவச கல்வி பயிலகத்திற்கு வழங்கும் உதவி புரியும் வகையில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்து இந்த டிக்கெட்டை வாங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிக்க: செந்தில் பாலாஜி ஜாமீன் மனு; தள்ளுபடி செய்த உயர்நீதி மன்றம்!