12 நாட்களுக்கு முன் காணாமல் போன பிரபல பாடகி; உடல் சிதைந்த நிலையில் பிணமாக மீட்பு...!

கடந்த 12 நாட்களுக்கு முன் காணாமல் போன பிரபல பாடகி ஒருவர் தற்போது உடல் சிதைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
12 நாட்களுக்கு முன் காணாமல் போன பிரபல பாடகி; உடல் சிதைந்த நிலையில் பிணமாக மீட்பு...!
Published on
Updated on
1 min read

ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர் பாடகி சங்கீதா. இவர் கடந்த மே 11 ஆம் தேதியன்று காணாமல் போனதாக அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் பாடகி சங்கீதாவை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில் ஹரியானா மாநிலத்திலுள்ள பைனி பைரன் என்ற கிராமத்தில் சிதைந்த ஒரு பெண்ணின் உடல் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், அங்கு சிதைந்து பிணமாக கிடப்பது சங்கீதா தான் என்பதை உறுதிசெய்து கண்டுபிடித்தனர்.

இதனையடுத்து சாதாரணமாக பதிந்த வழக்கை, போலீசார் உடனடியாக கொலை வழக்காக மாற்றி, சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு பேரை கைது செய்து விசாரணை செய்தனர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதாவது அவர்கள் இரண்டு பேரும் இணைந்து இசை வீடியோ எடுப்பதாகக் கூறி பாடகி சங்கீதாவை வரவழைத்து, திட்டமிட்டு கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்திருப்பதாக தகவல்கள் கூறப்படுகின்றது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com