நடிகையிலிருந்து பாடகி அவதாரம் எடுத்த பிரபல மலையாள நடிகை..! இணையத்தில் ரசிகர்களை மிரள வைத்த பாடல் வீடியோ வைரல்!!

பிரபல மலையாள நடிகை ஒருவர் முதன்முறையாக தமிழ் படம் ஒன்றுக்கு பின்னணி பாடல் பாடியுள்ளார். இதுகுறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

நடிகையிலிருந்து பாடகி அவதாரம் எடுத்த பிரபல மலையாள நடிகை..! இணையத்தில் ரசிகர்களை மிரள வைத்த பாடல் வீடியோ வைரல்!!

மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது 40 வயதைக் கடந்த பிறகும்  முன்னணி நடிகையாகவே வலம் வந்துகொண்டிருக்கிறார் நடிகை மஞ்சு வாரியர். மலையாளத்தில் பிரபலமான இவர், தமிழில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான “அசுரன்” திரைப்படத்தில் பச்சையம்மாள் எனும் கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களை மிரள வைத்தார்.

இதனைத்தொடர்ந்து அடுத்ததாக இயக்குநர் அவதாரம் எடுத்துள்ள பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்கத்தில் உருவாக்கியிருக்கும் “சென்டிமீட்டர்“ எனும் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை மஞ்சு வாரியர் நடித்துள்ளார். மேலும் இந்தப்படத்தில் நடிகர் யோகி பாபு, காளிதாஸ் ஜெயராம், ஷைலி கிஷன் ஆகியோரும் இணைந்துள்ளனர்.  தமிழ் மற்றும் மலையாளம் என இரண்டு மொழிகளில் உருவாக்கப்பட்டு வரும் இப்படம், வரும் மே 20 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இந்தப்படத்தில்  இடம்பெற்ற “கிம் கிம் கிம்“ எனும் பாடலுக்கு நடிகை மஞ்சு வாரியர் பின்னணி பாடியுள்ளார். இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. முதல் முதலாகப் மஞ்சு வாரியர் தமிழில் பின்னணி பாடியிருக்கும் “கிம் கிம் கிம்“ பாடலைப் பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர்.