40 வயசுல திருமணம் குழந்தைகள் தேவையா... நயன்தாராவை குறித்து சர்ச்சை கருத்து பதிவிட்ட மருத்துவர்! எதிர்ப்பு தெரிவித்த சின்மயி!!

40 வயசுல திருமணம் குழந்தைகள் தேவையா... நயன்தாராவை குறித்து சர்ச்சை கருத்து பதிவிட்ட மருத்துவர்! எதிர்ப்பு தெரிவித்த சின்மயி!!

நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமணம் வெகு விமர்சையாக நடந்த நிலையில், மருத்துவர் ஒருவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்ட கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது அதற்கு பாடகி சின்மயி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 
Published on

இயக்குனர் விக்னேஷ் சிவன், நடிகை நயன்தாராவை  கடந்த ஜூன் 9 ம் தேதி, நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் திரையுலக நண்பர்கள் முன்னிலையில் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டார். மகாபலிப்புரத்தில் Sheraton Grand என்ற நட்சத்திர ஹோட்டலில் வெகு விமரிசையாக நடந்த திருமணத்திற்கு வருகை தந்திருந்த விருந்தினர்கள் புதுமணத் தம்பதிகளை வாழ்த்தி சென்றனர். 

விக்கி நயன் ஜோடி தங்கள் திருமண ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக மாநிலம் முழுவதும் உள்ள ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு மதிய உணவு வழங்க ஏற்பாடு செய்திருந்தனர். இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஷாருக்கான், விஜய் சேதுபதி, இயக்குனர் மணிரத்னம், நடிகர்கள் சூர்யா, கார்த்தி, ஜோதிகா, மோகன் ராஜா, கே.எஸ்.ரவிகுமார், அட்லி உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். 80க்கும் மேற்பட்ட பவுன்சர்கள் மற்றும் போலீசார்கள் பாதுகாப்புக்காக  குவிக்கப்பட்டிருந்தனர். 

முன்னதாக இவர்களது திருமணம் திருப்பதியில் தான் நடக்க இருப்பதாக சொல்லப்பட்டது. ஆனால் சில கட்டுப்பாடுகளால் மகாபலிபுரத்தில் நடந்தது. இப்படி இருக்க திருமணம் முடிந்த அடுத்த நாளே இந்த ஜோடி திருப்பதியில் சாமி தரிசனம் செய்தனர். அதன் பின்னர் கடந்த 11 ம் தேதி இருவரும் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய இருவரும், தங்களுக்கு ஆதரவு அளித்ததற்கு நன்றி தெரிவித்தனர். 

இந்நிலையில் தற்போது இருவரும், கொச்சியில் உள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் வைரலானது. இந்த நேரத்தில் தற்போது 37 வயதாகும் நயன்தாரா குறித்து இணையத்தில் மருத்துவர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். அது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அறிவன்பன் திருவள்ளுவன் என்ற மருத்துவர், " ஆர்வலர்களின் நடிப்பு திறமைக்கு மரியாதை கொடுக்கிறேன் ஆனாலும் தற்போது குடும்பம், குழந்தைகள் குறித்து பாட்டி வயதில் திட்டமிட்டுள்ளது பரிதாபமாக உள்ளது. இவருக்கு ivf சென்டர்கள் தான் உதவ முடியும் " என்று பதிவிட்டுள்ளார். 

இது சர்ச்சையான நிலையில் பாடகி சின்மயி இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ட்விட்டர் பக்கத்தில் " ஒரு  பெண் நடிகர் திருமணம் செய்ததற்கு இந்த மருத்துவர் இப்படி ஒரு மோசமான கருத்தை பதிவிட்டிருக்கிறார் " என  பதிவிட்டுள்ளார். அந்த மருத்துவரின் இந்த பதிவிற்கு நயன்தாரா ரசிகர்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com