3 கோடி ரூபாய் கூட வசூலாகாத 90 கோடி பட்ஜெட் படம் :  நஷ்டத்தை கொடுத்த கங்கனா ரனாவத்தின் 'தாகத்'

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடித்த 'தாகத்' திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பு பெறாத காரணத்தால் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளது.

3 கோடி ரூபாய் கூட வசூலாகாத 90 கோடி பட்ஜெட் படம் :  நஷ்டத்தை கொடுத்த கங்கனா ரனாவத்தின் 'தாகத்'

ரஸ்னீஷ் காய் இயக்கத்தில் கங்கனா ரனாவத் நடித்த 'தாகத்' திரைப்படம் மே 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஆனால், படம் வெளியாகி ரசிகர்களிடையே பெரிய அளவில் வரவேற்பு கிடைக்காததால், திரையரங்குகள் 'தாகத்' படத்தை திரையிடுவதை நிறுத்திவிட்டனர்.

சில திரையரங்குகள் நஷ்டத்தில் படத்தை திரையிட்டு வருகின்றன. பாலிவுட் ஹங்காமாவின் பாக்ஸ்-ஆபிஸ் அறிக்கையின்படி, படம் வெளியான 8-ஆம் நாளில், வெறும் 20 டிக்கெட்டுகளை மட்டுமே விற்று, ரூ.4,420 வருவாய் மட்டுமே ஈட்டியுள்ளது.

80 கோடி முதல் 90 கோடி ரூபாய் வரையிலான பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இப்படம் ரூ.3 கோடி அளவுக்கு கூட வசூலிக்கவில்லை.இதனால் தயாரிப்பாளர்கள் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.

ஓடிடி தளத்தில் கூட வெளியிட முடியாமல் படத் தயாரிப்பாளர்கள் திணறி வருகின்றனர். படத்தின் ரிலீஸ்க்கு பிறகு நல்ல தொகைக்கு விற்கலாம் எனத் தயாரிப்பாளார்கள் காத்திருந்தனர். ஆனால், படம் மோசமான தோல்வியைச் சந்தித்தால் எந்த நிறுவனமும் இதன் உரிமையைப் பெற முன்வரவில்லை.

படத்தின் திரையரங்க விநியோக உரிமையை ஜி ஸ்டூடியோ நிறுவனம் கைப்பற்றியிருந்தது. ஆனால், ஓடிடியில் வெளியிட அவர்கள் தயாராக இல்லை. இதனால், தயாரிப்பாளர்கள் தரப்பிலிருந்து அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் படத்தை விற்க முயற்சி செய்து வருகிறார்கள்.