36 வருட தவம் - இயக்குனர் லோகேஷ் கனகராஜின் ட்விட்டர் பதிவு வைரல்!!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான லோகேஷ் கனகராஜ் ட்விட்டரில் வெளியிட்ட பதிவு சமூக வலைத்தளங்களில் கடும் வைரலாகி வருகிறது. 

36 வருட தவம் - இயக்குனர் லோகேஷ் கனகராஜின் ட்விட்டர் பதிவு வைரல்!!

மாநகரம் திரைப்படத்தினை இயக்கியதன் மூலம் தான் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானார் லோகேஷ் கனகராஜ். இதன் பின் கைதி திரைப்படத்தை இயக்கி தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்கள் பட்டியலில் இடம்பெற்று நின்றார். கார்த்தியை வைத்து இயக்கிய கைதி திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜயை வைத்து மாஸ்டர் படததை இயக்கி நல்ல வரவேற்பையும் பெற்று இருந்தார்.

இத்திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து உலக நாயகன் கமல் ஹாசனின் 232 வது  “விக்ரம்” திரைப்படத்தை தற்போது இயக்கி முடித்து இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். இப்படத்திற்கான அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில் ஜூன் மூன்றாம் தேதியன்று இத்திரைப்படத்தை வெளியிட முடிவு செய்திருக்கின்றனர். 

 'ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷ்னல்' நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், அஞ்சாதே நரேன், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். படத்தின் இசை மற்றும் டிரைலர் வரும் 15-ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

இதனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜை கமல்ஹாசன் பாராட்டி உள்ளதாக தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். இது குறித்து லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் “36 வருட தவம் - எனக்குள் இருக்கும் இயக்குனரை என் உலக நாயகன் பாராட்ட!” என நெகிழ்ச்சியாக பதிவிட்டு இருக்கிறார். இந்த பதிவானது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.