190 நாடுகள், 17 மொழிகள்… பிரம்மாண்டமாக வெளியாகும் ‘ஜகமே தந்திரம்’… என்னென்ன மொழிகள் தெரியுமா!?

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜகமே தந்திரம்’ திரைப்படம் 190 நாடுகள் மற்றும் 17 மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

190 நாடுகள், 17 மொழிகள்… பிரம்மாண்டமாக வெளியாகும் ‘ஜகமே தந்திரம்’… என்னென்ன மொழிகள் தெரியுமா!?

சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஜூன் 18-ம் தேதி வெளியாக உள்ளது.

இந்தப் படத்தில் மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி கதாநாயகியாக நடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வித்தியாசமான கேங்ஸ்டர் திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது.  

இன்னும் இரு தினங்களில் ஜகமே தந்திரம் திரைப்படம் வெளியாக இருப்பதால் படம் குறித்த அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. தற்போது ஜகமே தந்திரம் திரைப்படம் 190 நாடுகள் மற்றும் 17 மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியாக இருக்கிறது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, இங்கிலீஷ், பிரெஞ்சு, ஜெர்மன், இத்தாலியன், பொலீஸ் போர்ச்சுகீஸ் பிரசிலியன் ஸ்பானிஷ், ஸ்பானிஷ்(நியூட்ரல்), தாய் இந்தோனேஷியன், வியட்நாமிஸ் உள்ளிட்ட 17 மொழிகளில் ரிலீஸாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.