“டான்” வெளியாகி 12 நாட்கள்...வசூல் மட்டும் 100 கோடி...படக்குழு அறிவிப்பு!!

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் திரைப்படத்தின் வசூலை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது.

 “டான்” வெளியாகி 12 நாட்கள்...வசூல் மட்டும் 100 கோடி...படக்குழு அறிவிப்பு!!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் சிவகார்த்திகேயன் நடித்து வெளியான திரைப்படம் ‘டான்’.இதனை அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கியிருந்த இப்படத்தை லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்திருந்தது. 

இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகனன் நடித்துள்ளார். இப்படத்தில் எஸ்.ஜே சூர்யா, சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். 

இப்படம் மே 13 திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தின் வெற்றியை டான் படக்குழுவினர் சமீபத்தில் கேக் வெட்டியும் கொண்டாடினர். 

இந்நிலையில் 'டான்' திரைப்படத்தின் வசூலை அதிகாரப்பூர்வமாக படக்குழு  அறிவித்து இருக்கிறது. இப்படம் உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் 12 நாட்களில் 100 கோடி வசூல் செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். டாக்டர் திரைப்படத்தை தொடர்ந்து டான் திரைப்படமும் 100 கோடியை எட்டியது ரசிகர்களுக்கு ஆனந்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.