ஒரே நிறுவனத்தில் 84 ஆண்டுகள் பணியாற்றிய 100 வயது முதியவர் - கின்னஸ் சாதனை!!

நூறு  வயதிலும் உற்சாகத்தோடு வேலை பார்த்து வரும் வால்டர், பணியை விரும்பி செய்தால் தான் ஒரே நிறுவனத்தின் நீடிக்க முடியும் என்கிறார். 

ஒரே நிறுவனத்தில் 84 ஆண்டுகள் பணியாற்றிய 100 வயது முதியவர் - கின்னஸ் சாதனை!!

தனியார் துறையை பொறுத்தவரையில் இன்றைய நவீன காலத்தில் ஒரே நிறுவனத்தில் பணியாற்று ஓய்வு பெறுவது என்பது மிகவும் அரிதான ஒன்றாக இருக்கிறது. இந்த சூழலில் தான் பிரேசிலில் நூறு வயதை கடந்த முதியவர் ஒருவர் 84 ஆண்டுகளாக ஒரே நிறுவனத்தில் தொடர்ந்து பணியாற்றி சாதனை படைத்து இருக்கிறார். இதற்காகவே அவரின் பெயரானது கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்று இருக்கிறது. 

பிரேசிலின் புருஸ்க்யூ நகரில் உள்ள ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் கடை நிலை ஊழியராக தான் தொடக்கத்தில் பணியாற்றி வந்தவர் வால்டர் ஆர்த்மன் என்பவர். படிப்படியாக முன்னேற்றம் அடைந்து விற்பனை மேலாளராக உயர்ந்தார். நூறு வயதிலும் அதே உற்சாகத்துடன் பணியாற்றும் வால்டர் பணியை விரும்பி செய்தால் ஒரே நிறுவனத்தில் நிச்சயம் நீடிக்க முடியும் என்றார். 

நிறுவனத்திற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றுவது போல, ஆரோக்கியத்திலும் முறையான கவனம் செலுத்துவது அவசியம் என கூறுகிறார். தினசரி உடற்பயிற்சியிலும் ஈடுபட்டுகிறார். தனது அன்றாட பணியை திறம்பட மேற்கொள்ளும் ஒருவரும் கின்னஸ் உலக சாதனை படைக்க முடியும் என நிரூபித்துள்ளார் வால்டர்.