JEE முதன்மைத் தேர்வில் முதலிடம் பிடித்த ஒரே பெண் பரீக்:

JEE முதன்மைத் தேர்வில் 14 மாணவர்கள் 100 சதவீத மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அவர்களுள் ஒரே ஒரு பெண் தான் முதலிடம் பிடித்திருக்கிறார் .

JEE முதன்மைத் தேர்வில் முதலிடம் பிடித்த ஒரே பெண் பரீக்:

JEE முதன்மை தேர்வுகளின் முதல் பாகம் முடிந்தது. அதன் முடிவுகள் இன்று வெளியானது.

தேசியத் தேர்வு முகமை (NTA), JEE முதன்மைத் தேர்வின் முதல் பாக முடிவுகளை இன்று வெளியிட்டது. அதில், 14 தேர்வாளர்கள், 100 சதவீத மதிப்பெண்களைப் பெற்றனர்.

மொத்தம் 8,72,432 வேட்பாளர்கள் இந்த முறை BE /B Tech துறை தேர்வெழுதிய நிலையில், 769589 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். சுமார் 257533 பெண்கள் பதிவு செய்து, அதில் வெறும், 221719 பெண்கள் மட்டுமே, JEE முதன்மைர்த் தேர்வின் முதல் பாகத்தில் கலந்துக் கொண்டனர். அதே போல, 614896 ஆண் மாணவர்களில் 547867 பேர் மட்டுமே இந்த தேர்வில் கலந்துக் கொண்டனர்.

இந்த பட்டியலில் 14 பேர் 300/300 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். மேலும், அதில் ஸ்னேஹா பரீக் என்ற மாணவி தான் ஒரே பெண் என்றும், மீதம் 13 பேர் ஆண் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், 9 பெண் மாண்வரகள் 99.98 மதிப்பெண்களுக்கு மேலும், 7 பெண்கள் 99.99 மதிப்பெண்களுக்கு மேலும் பெற்றுள்ளனர். இந்த தேர்வில், திருநர் சமூகத்தைச் சேர்ந்த 3 மாணவர்கள் கலந்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

JEE முதன்மைத் தேர்வுகள் 407 நகரங்களில், 588 தேர்வு மையங்களில் இந்த தேர்வு நடைப்பெற்றது. மேலும், இந்தியாவிற்கு வெளியே, மனாமா, தோஹா, துபாய், காத்மண்டு, முஸ்கேட், ரியாத், ஷார்ஜா, சிங்கப்பூர், குவெயித் நகரம், குவாலா லம்பூர், லாகோஸ்/ அபுஜா, கொலம்போ, ஜகார்டா, வியென்னா, மாஸ்கோ, போர்ட் லூயிஸ் மற்றும் பாங்கோக் ஆகிய 17 நகரங்களிலும் இந்த தேர்வு நடைப்பெற்றது.

தேர்வின் முடிவுகளை கீழ்க்கண்ட இணைய தளங்களில் காணலாம்.

nta.ac.in

ntaresults.nic.in

jeemain.nta.nic.in.