NET தேர்வு அறிவிப்பை வெளியிட்டது யுஜிசி..!

யுஜிசி நெட் தேர்வு வரும் ஜூன் முதல் அல்லது 2-ம் வாரத்தில் நடைபெறும் என யுஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.

NET தேர்வு அறிவிப்பை வெளியிட்டது யுஜிசி..!

யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக்குழுவின் நெட் தேர்வு என்பது தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் தகுதித் தேர்வாகும். கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் உதவிப்பேராசிரியராக பணியாற்ற இத்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம்.

இந்நிலையில்,  கடந்த 2021 டிசம்பர், 2022 ஜூன் மாதங்களில் நடைபெறவிருந்த யுஜிசி நெட் தேர்வு வரும் ஜூன் முதல் அல்லது 2-ம் வாரத்தில் நடைபெறும் என யுஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.  NET தேர்வு நடைபெறும் தேதியை தேசிய தேர்வு முகமை விரைவில் வெளியிடும் என்றும் அவர் கூறியுள்ளார்.