மொத்த இடங்களோ 10,425.. விண்ணப்பங்களோ 76,354.. நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் 65,787..!

ஆன்லைன் வாயிலாக நடைபெற்ற விண்ணப்பப்பதிவு நேற்றுடன் நிறைவு..!

மொத்த இடங்களோ 10,425.. விண்ணப்பங்களோ 76,354.. நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் 65,787..!

நீட் தேர்வில் 67,000 பாஸ்:

2022 - 23ம் ஆண்டிற்கான எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த ஜூலை 17ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. தமிழகத்தில் மட்டும் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் இந்த தேர்வை எழுதியதில் 67 ஆயிரத்து 787 பேர் தேர்ச்சி பெற்றனர். 

10,425 மருத்துவ இடங்கள்:

இதனையடுத்து, தமிழகத்தில் அரசு கல்லூரிகளில் உள்ள மருத்துவ இடங்கள் மற்றும் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் சுயநிதி கல்லூரிகளில் உள்ள இடங்கள் என மொத்தமுள்ள 10 ஆயிரத்து 425 மருத்துவ இடங்களை பூர்த்தி செய்வதற்காக மாணவர்களிடம் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் 
பெறப்பட்டுள்ளது. 

நேற்றுடன் முடிவு:

இதற்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு கடந்த 22ம் தேதி தொடங்கி நேற்று மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. இதில் மாணவர்கள் ஆர்வமுடன் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அளித்துள்ளனர்.

தனியார், அரசு ஒதுக்கீடு:

குறிப்பாக, அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் சேர்வதற்காக மொத்தம் 40 ஆயிரத்து 254 மாணவர்கள் விண்ணப்பத்தை பதிவு செய்துள்ளனர். அதில், 22 ஆயிரத்து 643 பேர் அரசு விண்ணப்பங்கள் மூலமாகவும் 13 ஆயிரத்து 457 பேர் தனியார் ஒதுக்கீட்டின் கீழும் விண்ணப்பத்தை பதிவு செய்துள்ளனர். 

பதிவு கட்டண விலக்கு:

மேலும், அரசு விண்ணப்பங்களில் மாற்றுத் திறனாளிகள் 85 பேர், படை வீரர் பிரிவில் 355 பேர், விளையாட்டு வீரர் பிரிவில் 306 பேர், விண்ணப்பங்களை பதிவு செய்துள்ளனர். அதேபோல பதிவு கட்டண விலக்கு பெற்றவர்கள் 5 ஆயிரத்து 22 பேர் அரசு விண்ணப்பங்களில் பதிவு செய்துள்ளனர்.