க்யூட், நீட்,ஜேஇஇ தேர்வுகளை இணைக்க திட்டமாம்..! ஒன்னுக்கே இங்க வழிய காணோம்.. இதுல மொத்தமா வேறயா?

இம்மாத இறுதிக்குள் நிபுணர்குழு அமைக்கப்பட்டு உள்நாடு, வெளிநாடுகளில் நடத்தப்படும் நுழைவுத்தேர்வுகள் ஆய்வு செய்யப்படும்..!

க்யூட், நீட்,ஜேஇஇ தேர்வுகளை இணைக்க திட்டமாம்..! ஒன்னுக்கே இங்க வழிய காணோம்.. இதுல மொத்தமா வேறயா?

க்யூட், நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை இணைப்பது தொடர்பாக ஒரு நிபுணர் குழுவை அமைக்க உள்ளதாக பல்கலைக்கழக மானியக்குழுத் தலைவர் தெரிவித்துள்ளார். 

ஒரே நுழைவுத்தேர்வு: மருத்துவப் படிப்புக்கு நீட், பொறியியல் படிப்புகளுக்கு ஜேஇஇ, மத்திய பல்கலைக்கழகங்களில் இணைவதற்கு க்யூட் என மத்திய அரசு நுழைவுத் தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்நிலையில் தேசிய கல்விக் கொள்கையின்படி ஒன்றுக்கு மேற்பட்ட நுழைவுத் தேர்வுகளை எழுத வேண்டுமெனில், ஒரே நுழைவுத்தேர்வு நடத்தப்படுவதே தங்கள் நோக்கம் என பல்கலைக்கழக மானியக்குழுத் தலைவர் ஜெகதீஷ் குமார் தெரிவித்துள்ளார். 

இம்மாத இறுதிக்குள் நிபுணர்குழு: ஆனால் அதற்கான நடைமுறைகள் இன்னும் வகுக்கப்படவில்லை எனவும், இம்மாத இறுதிக்குள் நிபுணர்குழு அமைக்கப்பட்டு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் நடத்தப்படும் நுழைவுத்தேர்வுகள் ஆய்வு செய்யப்படும் எனவும் கூறியுள்ளார். அடுத்த ஆண்டு பொது நுழைவுத்தேர்வு அமல்படுத்தப்படும் பட்சத்தில், அதன் பணிச்சுமை கருதி இப்போதே தயார்படுத்துதல் தொடங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.