வருங்கால பொறியாளர்களின் கவனத்திற்கு..! 

வருங்கால பொறியாளர்களின் கவனத்திற்கு..! 

தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் கலந்தாய்வு இன்று முதல் தொடங்கவுள்ளது. 

4 சுற்றுகள்:

அண்ணா பல்கலைக் கழக கட்டுப்பாட்டில் உள்ள உள்ள 431 பொறியியல் கல்லூரிகளில்  B.E., B.Tech., B.Arch.,உள்ளிட்ட பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான தரவரிசைப் பட்டியலை கடந்த 16ம் தேதி உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்டார். இதனை தொடர்ந்து, 4 சுற்றுகளாக கலந்தாய்வை நடத்த தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது. 

சிறப்பு பிரிவு:

அதன்படி, முதற்கட்டமாக இன்று சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்குகிறது. அண்ணா பல்கலைக் கழகத்தில் நடைபெறும் இக்கலந்தாய்வில் அரசு பள்ளிகளில் படித்த மாற்றுத்திறனாளி மாணவர்கள் 28 பேர், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் 3 பேர், விளையாட்டு பிரிவைச் சேர்ந்த 89 பேர் உட்பட மொத்தம் 124 பேர் மட்டும் பங்கேற்கவுள்ளனர்.

சிறப்பு ஒதுக்கீடு:

தொடர்ந்து, நாளை சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்குகிறது. இதில் பங்கேற்க 201 மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் 967 பேர், விளையாட்டு பிரிவு மாணவர்கள் ஆயிரத்து 258 பேர் என மொத்தம் 2 ஆயிரத்து 426 பேருக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து, வரும் 25ம் தேதி முதல் அக்டோபர் 21ம் தேதி வரை பொது கலந்தாய்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.