எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகளுக்கு தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க உத்தரவு..!

தொடக்க கல்வி பட்டயப் படிப்பு பயிற்சி தேர்ச்சி பெற்றவர்களை தேர்வு செய்ய திட்டம்..!

எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகளுக்கு தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க உத்தரவு..!

எ.கே.ஜி., யூ.கே.ஜி., வகுப்புகள்:

அங்கன்வாடி மையங்களில் செயல்படும்  எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகளுக்கு தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பள்ளி வளாகங்களில் செயல்பட்டு வரும் 2,381 அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகள் தொடர்ந்து செயல்பட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

தற்காலிக ஆசிரியர்கள்:

அத்துடன், எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகளுக்கு தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் எனவும், இதற்கு, தொடக்க கல்வி பட்டயப் படிப்பு பயிற்சி தேர்ச்சி பெற்றவர்களை தற்காலிக ஆசிரியர்களாக தேர்வு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதன் அடிப்படையில், நாளைக்குள் தற்காலிக ஆசிரியர்கள் தெரிவு செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.