டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு..! டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் விளக்கம்..!

டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு வரும் மே 21-ம் தேதி அன்று திட்டமிட்டபடி நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு..! டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் விளக்கம்..!

செய்தியாளர்களை சந்தித்த பாலச்சந்திரன், கடந்த ஆண்டை விட ஒன்றரை லட்சம் பேர் அதிகமாக டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத உள்ளதாகவும், 38 மாவட்டங்களில் உள்ள 117 மையங்களில் நடைபெற உள்ள தேர்வில் அதிகபட்சமாக சென்னையில் 7 மையங்களில் தேர்வுகள் நடைபெற உள்ளதாகவும் தெரிவித்து உள்ளார். 

மேலும் தேர்வர்கள் ஹால் டிக்கெட்டுடன் ஏதாவது ஒரு அடையாள அட்டையை எடுத்து வர வேண்டும் என்றும், முகக்கவசம் அணிந்து வந்தால் நல்லது எனவும் கூறிய அவர், தேர்வின்போது காலை 8.30 மணிக்கே தேர்வர்கள் வர வேண்டும் என்றும் 9 மணிக்கு பின் தேர்வு மையத்திற்குள் வரும் தேர்வர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும்  திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.