எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடக்கம்..!

முதல்நாளில், சிறப்பு பிரிவு மாணவர்களுக்கும், 20 ஆம் தேதி அரசு பள்ளி மாணவர்களுக்கு கலந்தாய்வு..!

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடக்கம்..!

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்.,:

தமிழகத்தில் அரசு மற்றும் சுயநிதி கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கு மொத்தமுள்ள 8,225 இடங்களுக்கு ஆன்லைன் மூலமாக கடந்த செப்டம்பர் 21 ஆம் தேதி முதல் அக்டோபர் 6 ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டது. 

இன்று முதல் கலந்தாய்வு:

இந்நிலையில் இன்று முதல் வரும் 26ம் தேதி வரை சென்னை ஓமந்தூரர் பன்னோக்கு மருத்துவமனையில் கலந்தாய்வு நடைபெறுகிறது. முதல்நாளில், சிறப்பு பிரிவு மாணவர்களுக்கும், 20 ஆம் தேதி அரசு பள்ளி மாணவர்களுக்கு கலந்தாய்வு நடைபெறவுள்ளது. 

இதையும் படிங்க: எனக்கும், ஜெயலலிதாவுக்கும் சுமூக உறவு இல்லை என்பது எப்படி அவர்களுக்கு தெரியும்?