பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள், திட்டமிட்டபடி நாளை வெளியிடப்படவுள்ளது.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!

மாநில பாடத்திட்டத்தின்கீழ் படித்த பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு, கடந்த மே 6ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடைபெற்றது. இத்தேர்வினை 9 லட்சத்து 55 ஆயிரத்து 474 பேர் எழுதினர். விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணி கடந்த 1ம் தேதி முதல் 9ம் தேதி வரை 83 மையங்களில் நடைபெற்றது. தொடர்ந்து, விடைத்தாள்களை திருத்தும் பணிகள் முடிந்த நிலையில்,  மதிப்பெண்களைத் தொகுத்து தேர்வுத்துறையின் இணையதளங்களில் பதிவேற்றும் பணி நடைபெற்று முடிந்துள்ளது. 

இதனையடுத்து, திட்டமிட்டபடி நாளை காலை 10 மணிக்கு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படவுள்ளது. மேலும், மாணவர்களுக்கு மதிப்பெண்களை குறுஞ்செய்தியாக அனுப்ப அரசு தேர்வுத்துறை ஏற்பாடு செய்துள்ளது.