'கியூட்'..! எத்தனை மாணவர்கள் தேர்ச்சி? 

'கியூட்'..! எத்தனை மாணவர்கள் தேர்ச்சி? 

'கியூட்' இளங்கலை தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது தேசிய தேர்வு முகமை.

QUET  தேர்வு:

நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக் கழகங்களில் இளங்கலை, முதுகலை பட்டப் படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கான கியூட் தேர்வை மத்திய அரசு நடத்துகிறது. இதன்படி, நடப்பு கல்வி ஆண்டுக்கான கியூட் தேர்வு ஜூலை மாதம் 15 முதல் ஆகஸ்ட் 30 வரை 6 கட்டங்களாக நடைபெற்றது. இந்தியாவில் 259 நகரங்கள், இந்தியாவுக்கு வெளியே 9 நகரங்கள் என 489 மையங்களில், தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை மொத்தம் 14 புள்ளி 9 லட்சம் பேர் எழுதினர்.

தேர்வு முடிவுகள்:

இதன் முடிவுகள் நேற்று இரவு 10 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், கியூட் இளங்கலை தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை இன்று அதிகாலை வெளியிட்டது. இதில், 30 பாடங்களில் 20 ஆயிரம் மாணவர்கள் 100 சதவீதம் மதிப்பெண் பெற்றுள்ளனர். குறிப்பாக, ஆங்கில பாடத்தில் 8 ஆயிரத்து 236 பேரும், அரசியல் பாட திட்டத்தில் 2 ஆயிரம் பேரும், வணிகப் பிரிவில் ஆயிரத்து 669 பேரும் 100 சதவீத மதிப்பெண் பெற்றுள்ளனர். 

எப்படி பார்ப்பது:

இதன் முடிவுகளை cuet.samarth.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி உள்ளீடு செய்து முடிவுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் தேசிய தேர்வு முகமை தெரிவிக்கப்பட்டுள்ளது.