B.Ed., படிப்புக்கான மாணவர் சேர்க்கை இன்று முதல் தொடக்கம்.. அக்.3-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்..!

அக்டோபர் 12-ம் தேதி கலந்தாய்வு தொடங்கும் என அறிவிப்பு..!

B.Ed., படிப்புக்கான மாணவர் சேர்க்கை இன்று முதல் தொடக்கம்.. அக்.3-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்..!

வழிகாட்டு நெறிமுறை:

2022 முதல் 2023ம் கல்வியாண்டிற்கான B.Ed., பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகள் முன்னதாக வெளியிடப்பட்டன.

அக்.3-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்:

அந்த வகையில், B.Ed., படிப்புகளுக்கு இன்று முதல் அக்டோபர் 3ம் தேதி வரை இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என கல்லூரிக் கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.

அக்.12-ம் தேதி கலந்தாய்வு:

அக்டோபர் 6ம் தேதி ரேங்க் பட்டியல் வெளியிடப்படும் எனவும் அக்டோபர் 12ம் தேதி முதல் கலந்தாய்வு தொடங்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

69% இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும்:

அனைத்து வகைக் கல்லூரிகளிலும் B.Ed., மாணவர் சேர்க்கை 69 சதவீத இடஒதுக்கீடு முறையில் பின்பற்றப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

இணையதளம்:

மேலும் அரசு கல்வியியல் கல்லூரிகள், உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளில் சேர இதற்கென வெளியிடப்பட்ட http://www.tngasaedu.in இணையதளத்தை அணுகலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.