கேழ்வரகு பயிர்களை நாசம் செய்த காட்டு யானைகள்...

கேழ்வரகு பயிர்களை நாசம் செய்த காட்டு யானைகள்...

கிருஷ்ணகிரி | தேன்கனிக்கோட்டை அருகே ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள், கேழ்வரகு பயிர்களை நாசம் செய்ததால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.

தேன்கனிக்கோட்டை  வனப்பகுதியில் இருந்து, வெளியேறிய காட்டு யானைகள் கூட்டம், குருப்-டி கிராமத்தில் தஞ்சமடைந்துள்ளனர். அங்கு விவசாயி சந்திரப்பா என்பவருக்கு சொந்தமான நிலத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த 2 ஏக்கர் கேழ்வரகு பயிர்களை நாசம் செய்தது.

இதனால் வேதனை அடைந்த விவசாயி பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். 

மேலும் படிக்க | தொடரும் காட்டு யானைகளின் அட்டகாசம்... நடவடிக்கை எடுக்குமா வனத்துறை?