பள்ளி வளாகத்தில் தேங்கும் கழிவு நீர்...சரி செய்யுமா அரசு?

பள்ளி வளாகத்தில் தேங்கும் கழிவு நீர்...சரி செய்யுமா அரசு?

ராசிபுரம் அருகே அரசு பள்ளியில் தேங்கி  நிற்கும் மழைநீரில் மாணவர்கள் நடந்து செல்லும் அவல நிலை உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஜவ்வரிசி ஆலைகளின் கழிவு நீர்

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஊராட்சி  ஒன்றியம் கொமாரபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 500க்கும் மேற்பட்ட மாணவர்கள்  படித்து வருகின்றனர். இந்தப் பள்ளி அருகே  ஜவ்வரிசி ஆலைகள் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து வெளியேறும் கழிவு நீர், பைப்பு வழியாக அருகே உள்ள குட்டைக்கு திறந்து விடப்படுகிறது.

மழை காலங்களில் இந்த குட்டை பகுதியில் இருந்து வெளியேறும்  ஆலை கழிவு நீரானது அருகே உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி பகுதியில் பல நாட்களாக துர்நாற்றத்துடன் தேங்கி நிற்கிறது. இதனால் ஆண்டு முழுவதும் பள்ளி வளாகம் பகுதியில் கழிவுகள் தேங்கி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மக்கள் கோரிக்கை

தற்போது அண்மையில் பெய்த மழையால் பள்ளி வளாகம் முழுவதும் பல நாட்களாக நீர் தேங்கிய வண்ணண் உள்ளது. மழை நீருடன் கழிவு நீரும் கலந்து பள்ளி வளாகத்தின் முன்பு குட்டை போல் தேங்கி வருகிறது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் மாணவ,  மாணவியர்,களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் இருப்பதாக அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பெற்றோர் தெரிவிக்கின்றனர். பல நாட்களாக இதே நிலை நீடித்து வரும் இந்நிலையில் நீரை அப்புறப்படுத்திட மாவட்ட நிர்வாகம், கல்வித்துறையும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.