திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் திருவண்ணாமலை விஜிலன்ஸ் துணை காவல் கண்காணிப்பாளர் வேல்முருகன் தலைமையில் 10 பேர் கொண்ட குழு திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். கணக்கில் வராத 2.25 ஆயிரம் ரொக்க தொகை, சால்வைகள் மற்றும் ஏராளமான பரிசு பொருட்களை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைப்பற்றி உள்ளனர்.
ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டம் தீபாவளிக்காக நடந்துள்ளது என்பது விசாரணையில் தெரிய வந்தது. இக்கூட்டத்தில் அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இவர்கள் செங்கம் வட்டார வளர்ச்சி திட்ட அலுவலர் விஜயலட்சுமியிடம் பரிசு பொருட்கள் மற்றும் ரொக்க பணத்தை கொடுப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறை துணை காவல் கண்காணிப்பாளர் வேல்முருகன் தலைமையில் காவல் ஆய்வாளர் மைதிலி மற்றும் கோபிநாத் ரஜினி கமலக்கண்ணூர் ஆகிய உட்பட்ட 10 பேர் கொண்ட குழு அங்கு அனைத்தையும் கைப்பற்றி வளர்ச்சி திட்ட அலுவலர் விஜயலட்சுமியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.