காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு...

தேன்கனிகோட்டை அருகே காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு...
Published on
Updated on
1 min read

கிருஷ்ணகிரி | காட்டு யானைகளின் தாக்குதல்கள் சமீப காலங்களில் அதிகமாக இருக்கிறது என பல தரவுகள் கூறுகின்றன. அவ்வகையில், தேன்கனிகோட்டை அருகே உள்ள தேவரபெட்டா கிராமத்தை சேர்ந்தவர் 53 வயதான விவசாயி இலகுமய்யா.

தனது ஆடுகளை இன்று தளி காட்டு பகுதிக்கு உட்பட்ட பங்களா சாரகம் காப்பு காட்டில் மேய்ச்சலுக்காக அழைத்து சென்றுள்ளார். அப்போது வனப்பகுதியில் சுற்றித் திரிந்த ஒற்றை காட்டு யானை திடீரென அவரை விரட்டி சென்று தாக்கியுள்ளது.

இதில் படுகாயமடைந்த விவசாயி இலகுமய்யா அலறி துடித்துள்ளார். அவரது அலறல் சத்தத்தை கேட்ட அப்பகுதியில் நின்ற பொதுமக்கள் அவரை மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தளி போலீசார் மற்றும் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com