தேக்கமடைந்த கரும்புகளால் கவலையில் ஆழ்ந்த விவசாயிகள்...

ஒரு கட்டு ரூ.50 க்கு விற்பனை செய்தாலும் வாங்க ஆள் இல்லாமல் கரும்புகள் தேக்கமடைந்துள்ளதால் வியாபாரிகள் கலக்கமடைந்துள்ளனர்.

தேக்கமடைந்த கரும்புகளால் கவலையில் ஆழ்ந்த விவசாயிகள்...

தஞ்சாவூர் | தமிழக முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வந்தாலும் தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை அரண்மனை கீழவாசல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வியாபாரிகள் குவித்து வைத்திருந்த கரும்புகள் பாதி அளவிற்கு விற்பனையாகாமல் தேங்கி கிடக்கிறது.

இதனால் கரும்பு வியாபாரிகள் படும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர் ஒரு கட்டு 180 ரூபாய் 160 ரூபாய்க்கு கொல்லையில் வாங்கிய வியாபாரிகள் தற்பொழுது ஒரு கட்டு கரும்பை வெறும் 100 ரூபாய் வரும் 50 ரூபாய்க்கு கூவி கூவி விற்பனை செய்து வருகின்றனர்.

இருந்தாலும் யாரும் கரும்பு கட்டிகளை வாங்காததால் வியாபாரிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது 2 லட்ச ரூபாய் முதலீடு செய்த வியாபாரிக்கு ஒரு லட்ச ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துப் போய் உள்ளனர்.

மேலும் படிக்க | பழையன கழிதலும் புதியன புகுதலும்... போகியைக் கொண்டாடும் தமிழர்கள்...