சுற்றுச்சூழலைக் காக்க பேரணி…மாணவர்கள் பேரணி!

சுற்றுச்சூழலைக் காக்க பேரணி…மாணவர்கள் பேரணி!

காட்டுமன்னார்கோவில் அருகே சுற்றுச் சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் நடைபெற்ற இப்பேரணியில், கல்லூரி மாணவ, மாணவியர், ரோட்டரி சங்கத்தினர் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

வீராணம் ஏரி ரோட்டரி சங்கம் மற்றும் எம்.ஆர்.கே.கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் நடைபெற்ற இப்போரணியில், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் முறை குறித்தும், மரம் வளர்ப்பு, மழை நீர் சேகரிப்பு உள்ளிட்டவைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.