ரூ.38 லட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல்...

ரூ.38 லட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல்...
Published on
Updated on
1 min read

தென்காசி | சங்கரன்கோவில் அருகே 38 லட்சம் மதிப்பிலான 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். களப்பாகுளத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது, பைகளில் 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் இருப்பது தெரிய வந்தது. இதுதொடர்பாக, வேலூர் காட்பாடியை சேர்ந்த பாலசுப்ரமணியன் , சந்தோஷ், சிராஜ் கரீம், திருப்பத்தூர் வீரபத்திரன் உள்ளிட்ட 13 பேரையும் போலீசார் கைது செய்து, கள்ள நோட்டுகள் மற்றும் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com