புதுச்சேரி மீனவர்கள் போராட்டம்!

புதுச்சேரி மீனவர்கள் போராட்டம்!

புதுச்சேரி நகரப்பகுதியில் உள்ள குபேர் மீன் அங்காடி உள்ளிட்ட அங்காடிகள் உள்ளூர் மீனவர்கள் பிடித்த மீன்களை விற்பனை செய்து வருகின்றனர், சமீக காலமாக தமிழகம், கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்து புதுச்சேரிக்கு மீன்களை கொண்டு வந்து இதற்கான முகவர்கள் மூலம் விற்பனை செய்கின்றார்கள்.

வெளி மாநிலத்தில் இருந்து வரும் மீன்களை விற்பனை செய்யப்படுவதால் உள்ளூர் மீனவர்கள் விசைப்படகுகளில் சென்று பிடித்து வரப்படும் மீன்கள் விற்பனை ஆவது இல்லை எனக்கூறியும், உரிய விலை கிடைக்கவில்லை எனக்கூறியும் கடந்த ஒருவாரமாக விசைப்படகு உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

இந்நிலையில் அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த வித உடன்பாடும் எட்டப்படாததால் இன்று 7வது நாளாக 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு போகாமல் தேங்காய்திட்டு மீன் பிடித்துறைமுகத்தில் அனைத்து படகுகளையும் நிறுத்திவைத்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள். இதனால் பல கோடி ரூபாய்க்கு மீன் பிடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.