சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்குமாறு கோரிக்கை...

கரடிவாவி பகுதியில் ஆட்டை அடித்துக் கொன்ற சிறுத்தையை நேரில் பார்த்ததாக பெண்ணின் தகவலை அடுத்து பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். வனத்துறையினர் கூண்டு வைத்துப் பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்குமாறு கோரிக்கை...
Published on
Updated on
1 min read

திருப்பூர் : பல்லடம் அருகே ஆட்டை கடித்துக் கொன்ற சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கரடிவாவி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக சிறுத்தை ஒன்றின் நடமாட்டம் இருப்பதாக அப்பகுதியினர் புகார் கூறி வந்தனர். குறிப்பாக மர்மமாக சுற்றி வரும் இந்த மிருகம், சிறுத்தையா? அல்லது நரியா? என்ற குழப்பமும் மக்கள் மத்தியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், விளைநிலத்தில் தீவனப் பயிரை மேய்ந்து கொண்டிருந்த ஆடு ஒன்றை, நேற்று முன்தினம் (அதாவது நவ. 7ம் தேதி) சிறுத்தை கடித்து கொன்றதாக சொல்லப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களுக்கு பயத்தையும் பீதியும் ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து, இன்று மாலை மர்மமான மஞ்சள் நிற மிருகம், கரும்புள்ளிகளுடன் கண்டதாக கர்டிவாவி பகுதியைச் சேர்ந்த 47 வயதான தொழிலாளி ராதா காட்டுவழி சென்றபோது கண்ணுக்கெட்டிய தூரத்தில் கண்டதாக கூறி, அலறியடித்து ஓட்டம் பிடித்ததாகக் கூறப்படுகிறது.

பின், ஓட்டம் பிடித்து அருகில் வருவோர் போபவரிடம் எல்லாம் சிறுத்தையை பார்த்ததாக பெண் கூறியதால் பொதுமக்கள் பீதியில் உறைந்துள்ளனர். எனவே, சிறுத்தையை உடனடியாக கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை எழுந்துள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் சற்று பீதியடைந்துள்ளனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com