திரௌபதி அம்மன் கோவில் திருவிழாவில் ஏராளமானோர் பங்கேற்பு...

திருவிழாவில் உடல் முழுவதும் அலகு குத்திக்கொண்டு கொக்கி போட்டு கயிற்றில் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் ஆறு கிலோமீட்டர் தூரத்திற்கு முருகம்ப்பட்டு கிராமத்திற்கு இழுத்துச் சென்றனர்.
திரௌபதி அம்மன் கோவில் திருவிழாவில் ஏராளமானோர் பங்கேற்பு...
Published on
Updated on
1 min read

திருவள்ளூர் | திருத்தணி காந்தி சாலையில் அமைந்துள்ள  ஸ்ரீ திரெளபதி அம்மன் ஆலய தீமிதித் திருவிழா 23ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு விமர்சையாக நடைபெற்று வருகின்றது. 18 நாட்கள் நடைபெற உள்ள திருவிழாவில் ஏப்ரல் 9ந் தேதி தீமிதித் திருவிழா நடைபெற உள்ளது.

விழாவை யொட்டி   ஏராளமான பக்தர்கள் அம்மனுக்கு காப்பு கட்டிக் கொண்டு விரதமிருந்து வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை அம்மன் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளினார். முருகம்ப்பட்டு கிராமம் சார்பில் கிராம இளைஞர்கள்  தங்கள் நேர்த்திக்கடன் நிறைவேற்றினர்.

உடல் முழுவதும் அலகு குத்திக்கொண்டு முதுகில் கொக்கிப்போட்டு அலங்கரிக்கப்பட்ட அம்மன் எழுந்தருளிய டிராக்டர் மற்றும் பூங்கரகத்தை கார், ஜீப், ஆகிய  வாகனங்கள் இழுத்துக்கொண்டு  ஊர்வலமாக ஆறு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கிராமமான முருகம்ப்பட்டு சென்றனர்.

அம்மன்  ஊர்வலத்தில் இளைஞர்கள்  கால்களுக்கு கட்டைகள் கட்டிக்கொண்டு நடனமாடியபடியும் மேள தாளங்கள் முழங்க ஊர்வலம் நடைபெற்றது.

இதனை அடுத்து முருகம்ப்பட்டு கிராம வீதிகளில் அம்மன் திருவீதியுலா நடைபெற்றது. பக்தர்கள்   தேங்காய் உடைத்து தீபாராதணை காட்டி வழிபாடு செய்து தங்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். அம்மன் உலாவையொட்டி கிராமத்தில் விழாக்கோலம் பூண்டு காணப்பட்டது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com