ஒரு பேருந்து நிருத்தத்தில் இத்தனை வசதிகளா?

ஒரு பேருந்து நிருத்தத்தில் இத்தனை வசதிகளா?
Published on
Updated on
2 min read

உலக அளவில் முதன் முறையாக சூரிய ஒளி மின் வசதி மூலம் செயல்படும் நவீன வசதிகளுடன் கூடிய குளிர்சாதன இரண்டடுக்கு பேருந்து நிழற் கூடம் கலைஞர் கருணாநிதியின் நூறாவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தருமபுரியில் திறக்கப்பட்டுள்ளது.
    
தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 58 இலட்ச ரூபாய் மதிப்பில்  கட்டப்பட்ட தமிழ்நாட்டில் முதல் முறையாக சூரிய ஒளி மின்சக்தி மூலம் இயங்கும் அதி நவீன வசதிகளுடன் கூடிய குளிர்சாதன இரண்டடுக்கு பேருந்து நிழற் கூடம் கலைஞர் கருணாநிதி அவர்களின் நூறாவது பிறந்த நாளை முன்னிட்டு திறந்து வைக்கப்பட்டது.

தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் செந்தில் குமார் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் சாந்தி இந்த நிழற் கூடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து நிழல் கூடத்தில் உள்ள வசதிகளை பார்வையிட்டார். இந்நிழல் கூடத்தில் குளிர்சாதன வசதியுடன் பயணிகளுக்கு இரண்டடுக்கு தளத்தில் இருக்கை வசதி. தானியங்கி பரிவர்த்தனை எந்திரம், ஏடிஎம் மையம், சிறப்பு அங்காடி, தானியங்கி சூரிய மின் சக்தி நிலையம், 24 மணி நேர கண்காணிப்பு கேமரா வசதி,  24 மணி நேரமும் இலவச வைஃபை வசதி ஆகிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், அதிநவீன வர்த்தக விளம்பர எல்இடி பலகை. குளிர்சாதன பாதுகாக்கப்பட்ட தாய் சேய் பாலூட்டுஅறை. மினி நூலக வசதி, அரசின் ஈராண்டு சாதனைகள் குறித்த வாசகங்கள் தருமபுரி பண்பலை வானொலியை கேட்கும் வசதி, தொலைக்காட்சி பெட்டி, செல்பி பாயிண்ட். கார்டன் சீட் அவுட். செல் சார்ஜிங் பாயிண்ட் இவை அனைத்தும் அது நவீன நிழல் கூடத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் இத்தனை வசதிகளும் உள்ள பேருந்து நிழற் கூடம் அமைக்கப்படுவது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம், கூடுதல் ஆட்சியர் தீபனா விஸ்வேஸ்வரி, கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் தடங்கம் சுப்ரமணி, மற்றும் அரசு அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com