மாடித் தோட்டத்தில் காய்கறிகள் வளர்க்கும் மாற்றுதிறனாளி...

பெரம்பலூரில் மாற்றுதிறனாளி ஒருவர் வீட்டின் மாடியில் தோட்டம் அமைத்து காய்கறிகளை வளர்க்கும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாடித் தோட்டத்தில் காய்கறிகள் வளர்க்கும் மாற்றுதிறனாளி...

பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி கலையரசன்!

இவர் எளம்பலூர் கிராமத்தில் பல வருடங்களாகவே சைக்கிள் பஞ்சர் கடை நடத்தி வருகிறார் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வீட்டின் மாடியில் தோட்டம் அமைத்து காய்கறிகளை அறுவடை செய்து ஆரோக்கியமான உணவை சாப்பிட்டு வருகிறார்கள்.மாடித்தோட்டத்தில் வெண்டை, கேரட், பீட்ரூட், கொத்தமல்லி, முள்ளங்கி, கத்தரி, தக்காளி, கீரை, பாகற்காய், அவரை, குடைமிளகாய், புதினா, பச்சைமிளகாய் போன்ற காய்கறிகளை பயிர் செய்து வருகிறார்.

மேலும் படிக்க | தக்காளி விலை வீழ்ச்சி ; கால்நடைகள் தின்னும் அவலம்...

ரசாயனம் கலந்த உணவைச் சாப்பிடுவதால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படுகின்றன என்பதை நாம் பார்க்கிறோம். பெரும்பாலான பிரச்னைகளுக்குக் காரணம் உணவு முறை தான். அடுத்தத் தலைமுறையை காப்பாற்ற வேண்டிய கடமை, பொறுப்பு ஒவ்வொருவருக்கும் உண்டு. முதலில் ஆரோக்கியத்தை நம் உணவில் காட்ட வேண்டும்.

நாம் வாங்கும் காய்கறிகள் மற்றும் பழங்களில் ரசாயனம் கலக்காமல் இயற்கை முறையில் நிறைந்ததாக இருக்க வேண்டும். தற்போதுள்ள பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள்  அதிகளவில் மாடித்தோட்டம் அமைப்பதற்கு முன்வர வேண்டும். என்று கூறுகிறார் மாற்றுத்திறனாளி கலையரசன்.

மேலும் படிக்க | சாலையோர சிறு வியாபாரிகளுக்கு தள்ளுவண்டி...