பனை விதைகளை நடவு செய்த தன்னார்வ இளைஞர்கள்..!

பனை விதைகளை நடவு செய்த தன்னார்வ இளைஞர்கள்..!

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள கொடும்பாளூரில் 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஆர்வமாக கலந்து கொண்டு பனை  விதைகளை நட்டனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் மிகப்பெரிய குளத்தில் இரண்டாவதாக கொடும்ப குளம் அமைந்துள்ளது. இந்த குளத்தின் கரையை சுற்றி ஆயிரம் பனை விதைகள் மற்றும் விராலிமலை, விராலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள குளங்களில் 10,000 க்கும் அதிகமான பனை விதைகள் நடப்பட்டு  உள்ளது. 

இதனால் இந்த பகுதிகளை சுற்றியுள்ள கிராம மக்கள் அந்த இளைஞர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். பனை விதைகள் நடப்படுவதால் குளத்தின் கரைகள் அரிக்கப்படாமல் பாதுகாப்பாக இருப்பதற்காக பனை மரங்கள் வளர்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.