இளம்பெண் உளியால் குத்தி கொலை!!! பரபரப்பு சம்பவம் ...

இளம்பெண் உளியால் குத்தி கொலை!!! பரபரப்பு சம்பவம் ...

திண்டுக்கல் அருகே அடிதடி தகராறில் இளம்பெண் உளியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் அடுத்த சிலுவத்தூர் சேர்ந்தவர் சக்திவேல். கூலித்தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி (35). இன்று இரவு  சக்திவேல் -  லட்சுமி இருவரும் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக டூவீலரில் வந்த அதே பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவர் சிவக்குமார் இவர்கள் மீது இடித்துள்ளார். இதில்  இவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு அடிதடி தகராறு ஏற்பட்டது. இதனை அடுத்து சக்திவேலின் வீட்டிற்கு சென்று சிவக்குமார் தகராறில் ஈடுபட்டார்.  அப்போது கையில் வைத்திருந்த உளியால் லட்சுமியின் கழுத்தில் ஓங்கி குத்தினார். இதில் பலத்த காயமடைந்த லட்சுமியை கீழே விழுந்தார். இவரை மீட்டு அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து  மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து சாணார்பட்டி போலீசார் விசாரணை நடத்தி தலைமறைவாகியுள்ள லாரி டிரைவர் சிவக்குமாரை தேடி வருகின்றனர். உளியால் இளம்பெண்ணை குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.