சென்னையில் கட்டிட இடிப்பால் உயிரிழந்த பெண்....பணி நிறுத்த நோட்டீஸ்!!

சென்னையில் கட்டிட இடிப்பால் உயிரிழந்த பெண்....பணி நிறுத்த நோட்டீஸ்!!

அண்ணா சாலையில் பழைய கட்டிட இடிப்பின்போது பெண் உயிரிந்த சம்பவம்.  சம்பந்தப்பட்ட
பணிகள் அனைத்தையும் உடனடியாக நிறுத்த சென்னை மாநகராட்சி நோட்டீஸ். 

இடிக்கும் பணிகள்:

சென்னை அண்ணா சாலை ஆயிரம் விளக்கு சுரங்க பாதை அருகே பழமையான தனியார் கட்டிடம் ஒன்றை இடிக்கும் பணி நடைபெற்று வந்தது.  அப்போது கட்டிட இடிபாடுகள் மேலிருந்து சரிந்த போது பக்கவாட்டில் சென்ற இளம்பெண் மீது விழுந்ததில் அவர் உயிரிழந்தார்.  இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

அனுமதியுடனே... :

இது தொடர்பாக தகவல் தெரிவித்த மாநகராட்சி அதிகாரிகள், முன் அனுமதி பெற்று தான் கட்டிடத்தை இடிக்கும் பணி நடைபெற்றுள்ளது.  ஆனாலும் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள், தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இந்தப் பணி நடைபெற்றது தெரியவந்துள்ளதாக தெரிவித்தனர்.  

நிறுத்தப்பட்ட பணி:

மேலும், பணியை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் மறு உத்தரவு கொடுக்கும் வரை அங்கு  பணி தொடங்க கூடாது எனவும் கட்டிடத்தின் உரிமையாளருக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளதாகவும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

-நப்பசலையார்

இதையும் படிக்க:  மோதலுக்கு தயாராக இருப்பவரா முதலமைச்சர்....முரசொலியின் விளக்கம் என்ன?!!