காலம் போன வயதில் முதியவர் செய்த காரியம்...அதிரடி ஆக்க்ஷன்... 

காலம் போன வயதில் முதியவர் செய்த காரியம்...அதிரடி ஆக்க்ஷன்... 

பண்ருட்டி அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து முதியவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது.

கடலூர் மாவட்டம்  பண்ருட்டி அடுத்த வி.ஆண்டிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த முகமது அன்சாரி (வயது 56) .இவர் கடலூரில்  உள்ள காலணி  விற்பனை கடையில் பணிபுரிந்து வருகிறார்.

22.11.22 அன்று அதே ஊரைச் சேர்ந்த 17 வயதுடைய மாணவி வீட்டில் தனியாக இருந்தபோது பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவியின் பெற்றோர்கள் முதியவர் மீது பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் .புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் வள்ளி மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து முதியவரை தேடி வந்த நிலையில் இன்று கைது செய்தனர் .விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் முதியவரை போக்சோ வழக்கில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.