“விலை உயர்த்தாவிட்டால் ஆவினுக்கு பால் தர மாட்டோம்” - விவசாயிகள் போராட்டம்...

விலையை உயர்த்தாவிட்டால் ஏப்ரல் 1 முதல் ஆவினுக்கு பால் தர மாட்டோம் என விவசாயிகள் கோட்டாட்சியர் அலுவலக வாயிலில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

“விலை உயர்த்தாவிட்டால் ஆவினுக்கு பால் தர மாட்டோம்” - விவசாயிகள் போராட்டம்...

திருப்பூர் | தாராபுரத்தில் தொடர்ந்து விவசாயிகள் பால் விலையை  உயர்த்தி தர கோரிதமிழகம் முழுவதும் பலகட்ட போராட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று தாராபுரத்தில் பால் உற்பத்தி விவசாயிகள் சங்கங்கள் ஒன்றி வாழ்வாதாரத்தை உயர்த்த பெரிதும் உதவியாக இருப்பது கால்நடை வளர்ப்பு, அவ்வகையில் விவசாயிகளின் பொருளாதாரத்தில் பெரும் பங்கு வகிப்பது கால்நடை வளர்ப்பு மற்றும் பால் விற்பனை மட்டுமே.

எனவே,விவசாயிகளின் நலன் கருதி அரசு பசுமாட்டுப்பால் லிட்டர் ரூ 50க்கும் எருமைப்பால் ரூ 65க்கும் கொள்முதல் செய்ய கோரி  தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் மற்றும் உழவர் உழைப்பாளர் கட்சி ஈஸ்வரன் தலைமையில் கொங்கு மக்கள் தேசிய  முன்னேற்ற கழகம் ரத்தினசாமி முன்னிலையில் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

மேலும் படிக்க | “தனியாருக்கு தாரைவார்க்காதே” - தூய்மை பணியாளர்கள் திடீர் போராட்டம்...

இந்த நிலையில் ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க கோரி தாராபுரம் பால் உற்பத்தியாளர் மற்றும் விவசாயிகள் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பாலைத் தரையில் ஊற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

விவசாயத்தில் போதுமான அளவிற்கு வௌமானம் இல்லாததால் தான் கால்நடைகளைப் பயன்படுத்தி வருகின்றனர் விவசாயிகள். இந்நிலையில், பால் போன்ற அதிக வருமானம் ஈட்டக் கூடியதிலும், விலை உயர்த்தாமல் பழைய விலைக்கே விவசாயிகளிடம் வாங்கி வருவதால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது என்பது தான் விவசாயிகளின் கவலையாக இருக்கிறது.

இதனால், பாலின் விலையை ஏற்றாவிட்டால் வருகிற ஏப்ரல் 1ம் தேதி முதல் ஆவினுக்கு பால் உறபத்தி செய்யப்படாது என விவசாயிகள் ஆர்பாட்டத்தில் தெரிவித்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்க | தமிழ்நாடு அரசு ஆவின் பால் உற்பத்தியாளர்களுக்குக் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும்! – சீமான்