வேளச்சேரி இரயில்கள் இனி கடற்கரைக்கு செல்லாது!

வேளச்சேரி இரயில்கள் இனி கடற்கரைக்கு செல்லாது!

சென்னை கடற்கரையிலிருந்து வேளச்சேரி வரை இயக்கப்பட்டு வந்த பறக்கும் இரயிலகள் இனி கடற்கரை இரயில் நிலையத்திற்கு செல்லாது எனவும் சிந்தாதிரிப்பேட்டை இரயில் நிலையத்திலிருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே 4 கி.மீ தொலைவிற்கு நான்காவது வழிதடத்தை விரிவாக்கம் செய்யும் பணி ரூ.279 கோடி மதிப்பில் தொடங்கப்பட்டுள்ளது. இப்பணிகள் தொடர்ந்து 7 மாத காலம் நடைபெற உள்ளது. இதனால் சென்னை கடற்கரையிலிருந்து வேளச்சேரி வரை இயக்கப்பட்டு வந்த பறக்கும் இரயிலகள் இனி கடற்கரை இரயில் நிலையத்திற்கு செல்லாது எனவும் சிந்தாதிரிப்பேட்டை இரயில் நிலையத்திலிருந்து புறப்படும் என நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இருந்தும் இத்தகவல் பயணிகளை சென்று சேராததால், இன்று காலை கடற்கரை இரயில் நிலையத்திற்கு ஏராளமான பயணிகள் வேளச்சேரி செல்வதற்காக வந்து குவிந்திருந்தனர். இரயில்வே நிலையத்தின் அறிவிப்பை பற்றி தெரியாத காணத்தினால்  இன்று காலை நீண்ட நேரமாக ரயில் வராததால் பயணிகள் அவதியடைந்தனர்.

இதற்கு மாற்று வழியாக, சிந்தாதிரிப்பேட்டை ரயில்  நிலையத்திலிருந்து சென்ட்ரல், பிராட்வே மற்றும் சென்னை கடற்கரை ரயில் நிலையம் வழியாக வள்ளலார்நகர் வரை ஒவ்வொரு 20 நிமிடம் இடைவெளியில்  மாநகர் போக்குவரத்து கழக பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இதையும் படிக்க: பட்டியலின மாணவரை தாக்கும் சக மாணவர்கள்...இணையத்தில் வைரலான வீடியோவால் பரபரப்பு!