வேதாரண்யம் : ஆயுத பூஜையை முன்னிட்டு பூக்கள் விலை கடும் உயர்வு...!

வேதாரண்யம் : ஆயுத பூஜையை முன்னிட்டு பூக்கள் விலை கடும் உயர்வு...!

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த  கருப்பம்புலம், ஆயக்காரன்புலம், மருதூர், பஞ்சநதிக்குளம், நெய்விளக்கு, குரவப்புலம் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 5 ஆயிரம் ஏக்கரில் முல்லைப் பூ மற்றும் செண்டி பூ சாகுபடி நடைபெறுகிறது. இத்தொழிலில் சுமார் 5000 குடும்பத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.

தினந்தோறும் நாகை, திருவாரூர், பட்டுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு பூக்கள் அனுப்பிவைக்கப்படுகிறது. நாளை ஆயுத பூஜையை முன்னிட்டு முல்லைபூ கிலோ 1000 ரூபாய்க்கும், செண்டு பூ கிலோ 120 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. பூக்கள் விளைச்சல் குறைவாக இருந்தாலும் பூவுக்கு இன்று நல்ல விலை கிடைத்திருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.