தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தி வைப்பு- பொதுமக்கள் ஏமாற்றம்!!

தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தி வைப்பு- பொதுமக்கள் ஏமாற்றம்!!

கிருஷ்ணகிரியில் தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்படும் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள் என 20க்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது.

மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 2 லட்சத்து 31ஆயிரம் நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நிலையில், தற்பொழுது தடுப்பூசி இல்லாமல் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நிறுத்தப்பட்டு உள்ளது.

இதனை அறியாத ஏராளமான மக்கள் மருத்துவமனைக்கு வந்து ஏமாற்றம் அடைந்து செல்வதுடன், மருத்துவர்கள் அறிவுறுத்தலின்படி குறுப்பிட்ட நாட்களில் ஊசி செலுத்திகொள்ள முடியா நிலை ஏற்பட்டு உள்ளதாக வருத்தம் தெரிவித்தனர்.