உகாதி பண்டிகை... பச்சடியுடன் அறுசுவை விருந்து!!

உகாதி பண்டிகை... பச்சடியுடன் அறுசுவை விருந்து!!

உகாதி பண்டிகையை ஒட்டி சென்னை தியாகராய நகரில் உள்ள திருப்பதி திருமலை தேவஸ்தான கோவிலில் பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.

உகாதி பண்டிகை ஆந்திரா, தெலுங்கானா,கர்நாடக மக்களால் புத்தாண்டாக மிகுந்த ஆடம்பரத்துடனும் ஆரவாரத்துடனும் கொண்டாடப்படும் புகழ்பெற்ற பண்டிகைகளில் ஒன்றாக உள்ளது.  சிந்தி மற்றும் மகாராஷ்டிரவின் ஒரு சில பகுதிகளிலும் உகாதி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

ஆந்திரா மற்றும் கர்நாடக மக்களால் உகாதி என்றும், மகாராஷ்டிரா மக்களால் குடி பட்வா என்றும், சிந்திகளால் செட்டி சந்த் என்றும் அழைக்கப்படுகிறது.  அந்த வகையில் உலகம் முழுவதும் உள்ள ஆந்திர மற்றும் தெலுங்கு கர்நாடக மக்களால் உகாதி பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.  அந்த வகையில்,சென்னை தியாகராய நகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானம் கோவிலில் பொதுமக்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

உகாதி பண்டிகையானது கலியுகம் தொடங்கிய நாளாகவும் கருதப்பட்டு கொண்டாடப்படுகிறது.  அதுமட்டுமல்லாமல் தமிழ், மலையாள மாதங்கள் சூரியனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுகிறதை போல தெலுங்கு, கன்னட மொழியின் மாதங்கள் நிலவின் இயக்கத்தை கணக்கிடப்பட்டு உகாதி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.

மேலும் உகாதி தினத்தில் அதிகாலையில் எழுந்து எண்ணெய் குளியல் இட்டு, நீராடிய பின் புத்தாடைகள் அணிந்து கொண்டு,  உகாதி பச்சடியுடன் அறுசுவை விருந்து சமைத்து பண்டிகையை மக்கள் கொண்டாடுவார்கள்.  அதாவது மனிதனுடைய வாழ்க்கையில் மகிழ்ச்சி, துக்கம், வெற்றி, தோல்வி என அனைத்து விஷயங்களும் கலந்து காணப்படுவது போல இந்த பச்சடியும் எல்லா சுவைகளும் கொண்டு செய்யப்படுகிறது.  இனிப்பு, காரம், கசப்பு மற்றும் புளிப்பு ஆகிய அனைத்து சுவைகளையும் உள்ளடக்கிய ஒரு முக்கிய உகாதி உணவாக பச்சடி உள்ளது.

இதையும் படிக்க:  அத்தி பழம் மாதிரி பிரித்து பார்த்தால் ஒன்றுமே இருக்காது....!!